வாய்ப்பு கிடைக்காவிட்டால் தயாரிப்பாளர்களை தேடி ஓடுவேன்: டாப்ஸி...
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: முன்பெல்லாம் வாய்ப்பு கிடைக்கும் படங்களில் எல்லாம் நடித்தேன். இப்போது தேர்வு செய்து நடிக்கும் இடத்திற்கு வந்திருக்கிறேன். எனது படங்களை மக்கள் ஏற்றுக் கொள்வதால் நான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். இனி நான் சினிமாவைத் தேடி ஓடுவதில்லை. ஒருவேளை படங்கள் இல்லை என்றால் நல்ல தயாரிப்பாளர்களை தேடி நான் ஓடுவேன். எனக்காக இந்த வேலையை யாரும் செய்ய மாட்டார்கள். நான் சுதந்திரமாக இருப்பதால் எனக்கான வேலையை நானே செய்து கொள்வேன். என்று கூறியிருக்கிறார்.