கோழிக்கோடு : கேரளா முதல்வர் பினராயி விஜயனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு விமான விபத்து குறித்து கேட்டு அறிந்தார். அப்போது, விமான விபத்து குறித்தும், மீட்புப் பணிகள் குறித்தும் எடுக்கப்பட்டு இருக்கும் நடவடிக்கைகள் குறித்தும் பினராயி விஜயன் விளக்கம் அளித்தார்.
மீட்புப் பணியில் ஈடுபடுவதற்கு தேசிய பேரிடர் மேலாண்மை பீட்பு படைக்கு மீட்புப் பணிகளில் ஈடுபடுமாறு உத்தரவு உள்துறை அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கேரளா முதல்வர் பினராயி விஜயனும் மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்கு தீயணைப்பு வீரர்களுக்கு, மீட்புப் படையினருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்வீட்டில் விமான விபத்து அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படைக்கு மீட்புப் பணிகளில் ஈடுபடுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
''உடனடி நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு தீயணைப்பு மற்றும் போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன். மீட்பதற்கும், உரிய மருத்துவ உதவி வழங்குவதற்கும் உத்தரவு பிறப்பித்துள்ளேன்'' என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்வீட்டில், ''கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். காயம் அடைந்தவர்களின் குடும்பத்துக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.
பாமக தலைவர் ராமதாஸ் தனது பதிவில், ''கேரள மாநிலம் கோழிக்கோடு விமானநிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளான செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன். மேலதிக விபரங்கள் எதுவும் தெரியாத நிலையில், விமானத்தில் இருந்த 174 பயணிகள் உள்ளிட்ட 191 பேரையும் காப்பாற்ற நடவடிக்கை தேவை'' என்று பதிவிட்டுள்ளார்.
Source: One India Tamil (https://tamil.oneindia.com/news/india/)