பிப்ரவரி 18ல் ஸ்ருதிஹாசனின் முதல் வெப் சீரிஸ் ரிலீஸ்

 

பிப்ரவரி 18ல் ஸ்ருதிஹாசனின் முதல் வெப் சீரிஸ் ரிலீஸ்...



கொரோனா பாதிப்பு ஏற்பட்ட இந்த இரண்டு வருட காலத்தில் ஓடிடி நிறுவனங்கள் ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தின. ஓடிடியில் புதிய படங்களை நேரடியாக வெளியீடு செய்து புதிய ரசிகர்களை, சந்தாதாரர்களை ஓடிடி நிறுவனங்கள் பெற்றன. இதனால், இந்திய மொழிகளில் புதிது புதிதாக வெப் சீரிஸ்களை தயாரித்து வெளியிடும் முயற்சியில் அவை இறங்கின.

சமந்தா, தமன்னா, காஜல் அகர்வால் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் நடித்த வெப் சீரிஸ்கள் ஓடிடி தளங்களில் வெளியாகின. அவர்களது வரிசையில் தற்போது ஸ்ருதிஹாசனும் இணைந்துள்ளார். 'பெஸ்ட் செல்லர்' என்ற வெப் சீரிஸ்தான் ஸ்ருதியின் முதல் வெப் சீரிஸ். இத்தொடர் பிப்ரவரி 18ம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

நேற்று ஸ்ருதிஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு இத்தொடர் வெளியீடு பற்றிய அறிவிப்பும் வெளியிடப்பட்டது. சைக்கலாஜிக்கல் த்ரில்லரான இத்தொடரில் மிதுன் சக்ரவர்த்தி, ஸ்ருதிஹாசன், அர்ஜன் பஜ்வா, கௌஹர் கான், சோனாலி குல்கர்னி, சத்யஜித் துபே மற்றும் பலர் நடிக்கிறார்கள். முகுல் அபயங்கர் இத்தொடரை இயக்கியுள்ளார்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post