வாட்ஸ் அப் டிஜிட்டல் அவதார்!


விகடன்

சமீபகாலத்தில் வெறும் மெசேஜிங் சேவையாக மட்டும் இல்லாமல் பல புதிய வசதிகளைத் தொடர்ந்து சேர்த்துக்கொண்டே இருக்கிறது வாட்ஸ்அப். ஆனால் வாட்ஸ்அப்பின் முக்கிய அம்சம் ஒருவருக்கு ஒருவர் மெசேஜ் அனுப்பிக்கொள்வதுதான். அதில் பெரிய அப்டேட்கள் எதுவுமே இல்லாமலே இருந்தது. அப்படி கடைசியாக வந்தது அனிமேட்டட் ஸ்டிக்கர்ஸ்தான்.

இப்போது மெசேஜிங் அனுபவத்தை மேம்படுத்த புதிதாக ஒரு அப்டேட் வரப்போவதை உறுதிப்படுத்தியிருக்கிறது WABetaInfo இணையதளம். இந்த அப்டேட்டின் மூலம் புதிதாக ‘அவதார்’களை உங்களால் உருவாக்க முடியும். அதாவது உங்கள் போட்டோவை வைத்து தானாகவே ஒரு டிஜிட்டல் அவதாரை உங்களுக்கு உருவாக்கித் தரும் வாட்ஸ்அப். அதை நீங்கள் ப்ரொஃபைல் படமாக வைத்துக்கொள்ள முடியும். இது இல்லாமல் உங்கள் அவதாரை வைத்து மொத்தமாக ஒரு ஸ்டிக்கர் பேக்கும் உருவாக்கித்தரப்படும். தேவைக்கேற்ப அதில் இருக்கும் ஸ்டிக்கர்களையும் நீங்கள் உரையாடும்போது பயன்படுத்திக்கொள்ள முடியும். தற்போது சில பீட்டா பயனாளர்களுக்கு மட்டும் இந்த வசதி கிடைக்கத் தொடங்கியிருக்கிறது. நீங்கள் பீட்டா பயனாளர் என்றால் வாட்ஸ்அப் செட்டிங்ஸில் ‘Avatar’ என்ற புதிய வசதி இருக்கிறதா என இப்போதே பாருங்கள். மிக விரைவில் அனைவருக்குமே இந்த ‘அவதார்’ அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றுமொரு முக்கிய அப்டேட்டும் விரைவில் வருகிறது. நீங்கள் அனுப்பும் போட்டோ/வீடியோவை எதிர்முனையில் இருப்பவர் பார்த்த உடன் அவை டெலிட் ஆகிவிடச் செய்யும் ‘View Once’ வசதியை சமீபத்தில் கொடுத்தது வாட்ஸ்அப். இந்த வசதியிலும் ஒரு சிக்கல் இருந்தது. அது முதல்முறை பார்க்கும்போதே சிலர் போட்டோவை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைத்துக்கொள்கிறார்கள். அப்படி எடுக்க முடியாத வண்ணம் ப்ளாக் செய்யும் புதிய அப்டேட் ஒன்றையும் திட்டமிட்டிருக்கிறது வாட்ஸ்அப்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post