அந்தரத்தில் பறக்கும் சிவகார்த்திகேயன் பட நடிகை.. வியப்பில் ரசிகர்கள்!
சென்னை : இயக்குனர் பிரியதர்ஷனின் மகளும் நடிகையுமான கல்யாணி பிரியதர்ஷன் தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.
அதைத் தொடர்ந்து சிம்பு நடித்துவரும் மாநாடு மற்றும் துல்கர் சல்மானுடன் இணைந்து வான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வரும் கல்யாணி அதேசமயம் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.
கொரானாவால் படப்பிடிப்புக்கள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ள நிலையில் ஜாலியாக ஊர்சுற்றி வரும் கல்யாணி இப்பொழுது அந்தரத்தில் பறந்தவாறு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பரபரப்பாக பகிரப்பட்டு வைரலாகி வரும் அதேசமயம் சிலர் ஐபிஎல் மேட்ச் பாக்க போறீங்களோ என கலாய்த்தும் வருகின்றனர்.
அதே சமயம் தமிழில் சிம்புவுடன் இணைந்து" மாநாடு "மற்றும் துல்கர் சல்மானுடன் இணைந்து "வான்" என திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வரும் கல்யாணி பிரியதர்ஷன் இப்பொழுது கொரானா நோய்த்தொற்று காரணமாக படப்பிடிப்பு முற்றிலும் முடங்கி உள்ளதால் செம ஜாலியாக ஊர் சுற்றியவாறு பல்வேறு புகைப்படங்களை சோஷியல் மீடியாக்களில் மிதக்கவிட்டு வருகிறார்.
வியப்பில் ஆழ்த்தியுள்ளது
இந்நிலையில் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுதந்திர பறவை போல ஆகாயத்தில் அங்குமிங்கும் பறந்து கொண்டு செம ஜாலியாக பொழுதை கழித்து வரும் கல்யாணி பிரியதர்ஷன் அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் பதிவிட்டதைத் தொடர்ந்து அது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.